சென்னை:இது தொடர்பாக தமிழக தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், டிட்டோ ஜாக் அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான சி.சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “30 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 13.10.2023 அன்று நடத்திட திட்டமிட்டுள்ள கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் ஆசிரியர்கள் தயாராகிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லாதபோது அமைச்சரைச் சந்திப்பது, களத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நாம் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று உயர்மட்டக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் எனக்கு தெரிவித்த கருத்தின் அடிப்படையில், அமைச்சரைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டக் களத்தில் சந்திப்போம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.