சென்னை:அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் சந்தித்து மனு அளித்தார்.
அதில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்தையும் கனிவோடு படித்துப் பார்த்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழியை நம்பி நம்பிக்கையோடு காத்திருப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நான்கு வழிச்சாலை பணிகள் 70 விழுக்காடு முடிவு: அமைச்சர் எ.வ.வேலு