தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் பேசுகையில், 'மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் 2014ஆம் ஆண்டு கணக்கர், மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்து 512 நபர்கள் எட்டாயிரத்து 400 ரூபாய் ஊதியத்திற்கு நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் பணிபுரிந்து வருகின்றனர். ஒட்டுமொத்த கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக மாறி வரும் காலத்தில் அனைத்து பணிகளையும், இவர்கள் செய்து வருகின்றனர். இருந்தும் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை இதுவரை வழங்காதது வருத்தமளிக்கிறது.