தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்; இ-சேவை மையத்தை அணுக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களை இ-சேவா சென்டர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 15, 2023, 5:36 PM IST

சென்னை:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் தகுதிப்பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ் நகல்களை இ-சேவா சென்டர் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், “ஆசிரியர் தேர்வு வாரியம் 2012, 2013, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடத்திய தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றினை எழுதி தகுதிப் பெற்றவர்களுக்கு மறுபிரதி வாரியத்தின் மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் மறுபிரதி வழங்குவதற்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் விண்ணப்பம் செய்து பெற்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு

இந்த நிலையில், இனி வரும் காலங்களில் மே 15ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம். ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் பெறுவதற்கு இசேவை மையத்தை அணுகும்படியும் விண்ணப்பதாரர்களிடம் மறுபிரதி கட்டணத்தொகையாக 100 ரூபாயும் மற்றும் இசேவை நிறுவனத்திற்கான சேவைக் கட்டணத்தொகை 60 ரூபாயும் சேர்த்து மொத்தத் தாெகை 160 ரூபாய் சேர்த்து இசேவை மையத்தில் செலுத்தி மறுபிரதி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details