சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின்(TET PAPER 1) முதல் தாளை எழுதிய 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 நபர்களில், 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட இரண்டாவது தகுதித் தேர்வான தாள் இரண்டை எழுதியவர்களில் 15,297 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் அதாவது தேர்வு எழுதியவர்களில் 6 விழுக்காடு மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கான ஆசிரியர் பணிக்குரிய போட்டி தேர்வு அரசாணை 149-இன் படி நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) தயாராகி வருகிறது. இந்தப் போட்டி தேர்விற்கான அறிவிப்பு மே மாதத்திற்குள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வில் கூறிய பாடத்திட்டங்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டினை எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 4 லட்சத்து ஆயிரத்து 856 பேர் பகுதி பெற்று அவர்களுக்கான தேர்வு கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும் தேர்வு கூட தேர்வு சீட்டு வழங்கும்போது தகுதியற்ற 30 நபர்களுக்கு வழங்காமல் நிறுத்திவைத்தது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வினை 2 லட்சத்து 54 ஆயிரத்து 224 பேர் எழுதியுள்ளனர் என தெரிவித்துள்ளது. பதிவு செய்த ஹால் டிக்கெட் பெறுவதற்கு தகுதி பெற்ற ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 எழுதாமல் இருந்தனர்.