தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TET: ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு
TET: ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிTET: ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்புப்பு

By

Published : Jul 5, 2022, 9:11 PM IST

சென்னை:இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை முதற்கட்ட தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை எழுதுவதற்கு மார்ச் மாதம் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று 18 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு: இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2002 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முதலில் மார்ச் மாதம் 14ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் இடைநிலை ஆசிரியருக்கான தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்றை எழுதுவதற்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் தாள் இரண்டை எழுதுவதற்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் பணிக்கு தகுதிப் பெற்றவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு செல்வதற்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதற்கு என்ன அவசரம்? - நீதிபதி கேள்வி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details