சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2202 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஏப்ரல் 26 ஆம் தேதி வரையில் விண்ணப்பித்தனர்.
மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்க 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 1 ஆயிரத்து 885 பேரும் என மொத்தமாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை னுக்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் 2 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 27 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்படுகிறது.