தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்க்கும் இடங்கள் அறிவிப்பு! - Master's degree teacher

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 11 இடங்களில் நடைபெறுகிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

teacher

By

Published : Nov 7, 2019, 11:50 PM IST

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 11 இடங்களில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்றுக்கான ஆன்லைன் வழி தேர்வு செப்டம்பர் 27 ,28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டு அவர்களின் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 8, 9 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள்:

  • பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • விருதுநகர் கே.வி சாலா மேல்நிலைப்பள்ளி
  • மதுரை தல்லாகுளம் ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  • கோயம்புத்தூர் டவுன் ஹால் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • சேலம் கோட்டை சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி
  • தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி
  • திருச்சி அண்ணா சிலை அருகில் இ.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி
  • விழுப்புரம் எஸ்.ஆர்.எம். வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  • வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுயநிதி மேல்நிலைப்பள்ளி
  • சென்னை மயிலாப்பூர் சென்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
    Teacher Recruitment Board

சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதம் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ள வரும்பொழுது அனைத்து சான்றிதழ்களுடன் தங்களது இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் உள்ளிட்ட சான்றுகளின் அசல், நகல் மதிப்பெண் சான்றுகளை தவறாமல் எடுத்து வரவேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, இன சான்றிதழை பதிவேற்ற அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details