தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் அதன் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்றது.
தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கையால் அரசின் பணம் வீண்- ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு! - undefined
சென்னை: "தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதால் அரசின் பணம் வீணாக செலவாகிறது" என்று, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் சங்கத்தின் நிறுவனர் மாயவன் கூறியதாவது, மத்திய அரசு, ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்கியுள்ளது. தேர்தல் நேரமாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு இதனை செயல்படுத்தி உள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்னும் மூன்று சதவீதம் அகவிலைப்படி உயர்வினை வழங்கவில்லை. எனவே உடனடியாக இதனை வழங்க வேண்டும். அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீடு அரசால் வழங்கப்படுகிறது.
இதற்கு தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி வீணாக செலவு செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்காமல் அந்த நிதியினை அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும். இந்த முறையினை மத்திய மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற்று எங்களின் கோரிக்கையை அரசு அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் தபால் ஓட்டுகள் வராமல் உள்ளன. தமிழ் தலைமை தேர்தல் அதிகாரி அனைவருக்கும் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.