தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் மதிப்பெண்ணில் தவறு ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே பொறுப்பு! - 10 +2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேர்வுத்துறை

10,12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின்போது மாணவர்களின் விடைத்தாள்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் தவறு ஏற்பட்டால், அதற்கு மதிப்பீடு செய்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பாவார்கள் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் மதிப்பெண்ணில் தவறு ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே பொறுப்பு - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

By

Published : Feb 8, 2022, 7:29 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பாதிப்பினால் 2019 ஏப்ரல் முதல் மாணவர்களுக்கு நேரடியாகப் பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடம் நடத்தப்படவில்லை.

கரோனா தொற்று குறைந்த பின்னர் 9,10,11,12ஆம் வகுப்பு மானவர்களுக்குச் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடப்பாண்டிற்கான நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மாணவர்களின் தேர்வு அச்சத்தை போக்குவதற்கு அரசுத் தேர்வுத்துறையின் மூலம் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், ஒமைக்கரான் வைரஸ் தொற்றால் ஜனவரி மாதம் முழுவதும் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தன.

கரோனா தொற்று குறைந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

மேலும், முதல் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசுத் தேர்வுத்துறை வழங்கி உள்ளது.

திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வு, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்குப் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 10 ஆம் தேதி (வியாழக் கிழமை) உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்றைய தினம் நடைபெறவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி ( வியாழக் கிழமை) அன்று நடைபெறும்.

மேலும் அனைத்து பள்ளித்தலைமையாசிரியர்களும் கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

  • ஒரு அறைக்குள் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும்.
  • மாணவர்கள் வருகையை 100 விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும்.
  • வினாத்தாள் பெறப்பட்டவுடன் மாணவர்களின் எண்ணிக்கையினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • தேர்வுகள் அனைத்தும் பொதுத்தேர்வுகளுக்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும்.
  • தினமும் அறைக்கண்காணிப்பாளர் ஒதுக்கீடு, மாணவர்களின் வருகை ஆகியவற்றிற்குப் பதிவேடு பராமரிக்க வேண்டும்.
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
  • 10ஆம் வகுப்பிற்குக் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், 12ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடைபெறும்.
  • விடைத்தாள்களை தேர்வு முடிந்தவுடன் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு தனித்தனி கட்டுகளாகக் கட்டி, சீல் இட்டு தலைமையாசிரியர் தனி அலமாரியில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • மாணவர் பெயர் எழுதக் கூடாது. விடைத்தாளில் மாணவர் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம் பெறக் கூடாது.
  • 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாள்களில் தேர்வு எண்ணாக நிரந்தர பதிவெண்ணை ( Permanent Register Number ) எழுத வேண்டும்.
  • தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம், பயிற்றுமொழி, மொத்த பக்கங்களின் எண்ணிக்கை மட்டுமே இடம் பெற வேண்டும்.
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

மதிப்பெண்களில் தவறு ஏற்பட்டால் ஆசிரியர் பொறுப்பு

  1. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது விடைத்தாள்களில் தேர்வு எண்ணாக மாணவர்களின் EMIS எண்களின் கடைசி 5 இலக்க எண்களோடு வரிசை எண்ணையும் இணைத்து 8 இலக்க எண்ணாக எழுத வேண்டும்.
  2. விடைத்தாள்கள் தினமும் தேர்வு முடிவடைந்தவுடன் வகுப்பு வாரியாக , பாட வாரியாக ( 10 மற்றும் 12 ) மற்றும் பயிற்று மொழி வாரியாக ( தமிழ் மற்றும் ஆங்கிலம் ) பிரித்து தனித்தனி கட்டுகளாகக் கட்ட வேண்டும்.
  3. ஒரு பள்ளியிலிருந்து 10ஆம் வகுப்பிற்கு தனிக்கட்டும், 12ஆம்வகுப்பிற்கு தனிக்கட்டும் கொண்டு வர வேண்டும். விடைத்தாள்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கட்டுகளை பிரித்துக்கொள்ளலாம்.
  4. விடைத்தாள்களை வினாத்தாள் கட்டுக்காப்பாளர் மையத்தில் ஒப்படைத்து தங்கள் பள்ளியில் மதிப்பிடவேண்டிய விடைத்தாள்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  5. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மதிப்பெண் பட்டியல் இரு நகல்கள் தலைமையாசிரியர் மற்றும் மதிப்பீடு செய்த ஆசிரியர் கையொப்பத்துடன் பூர்த்தி செய்து, இரு நகல்களில் 25ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் வினாத்தாள் கட்டுக்காப்பாளர் மையத்தில் ( Question Paper Custodian Centre ) ஒப்படைக்க வேண்டும்.
  6. திருத்தப்பட்ட விடைத்தாளைத் தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும்.
  7. மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை அந்தந்த பள்ளியில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  8. இந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஆய்விற்கு உட்படுத்தப்படும். விடைத்தாள்களை எவ்விதப் புகாருக்கும் இடம் அளிக்காமல் மதிப்பீடு செய்ய வேண்டும்.
  9. தலைமையாசிரியர் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை பார்வையிட்டு மதிப்பெண் சரியாக வழங்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
  10. விடைத்தாள்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில், தவறு ஏற்பட்டால் அதற்கு மதிப்பீடு செய்த ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியரே முழுப்பொறுப்பாவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும்படிங்க: மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details