சட்டபேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், தாராபுரம், உடுமலைப்பேடையில் பரப்புரை மேற்கொண்டபோது, அங்கிருந்த தேநீர் கடைக்குச் சென்று, தேநீர் அருந்தி, பொதுமக்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தற்போது உதயநிதி ஸ்டாலின்தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.