சென்னை: ரிஷப ராசிக்காரர்களே, 2024ல் பல தனித்துவமான அனுபவங்களைச் சந்திக்க நேரிடலாம். இந்த ஆண்டு, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிறைய மன உளைச்சல்களையும், எதிர்பாராத செலவுகளையும் அனுபவிக்கலாம். ஆகையால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
எவ்வளவு தடைகள் வந்தாலும், அவற்றால் எதையும் நீங்கள் கைவிட மாட்டீர்கள் என்பதையும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் உங்களுக்கானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு பணிபுரிபவர்கள் திறமைக்கேற்ற சம்பளம் பெறலாம். உங்கள் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களை முழு மனதுடன் ஆதரிப்பார்கள்.
குடும்பத் தொழிலை மேற்கொண்டால் இந்த ஆண்டு வெற்றி பெறுவீர்கள். ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் சொத்துக்கள் வாங்க உகந்த மாதங்களாகும். காதலிப்பவர்களுக்கு இந்த வருடம் நன்றாகவே இருக்கும். இந்த ஆண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் பயணம் செய்ய விரும்பினால், கூடிய விரைவில் விசாவிற்கு விண்ணப்பிப்பது நல்லது.
இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆண்டின் பிற்பகுதியில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு, மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் குடும்பத்தில் இருக்கும் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எச்சரிக்கையாக இருப்பது பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும். பிறந்த இடத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் ஒரு வீட்டை வாங்க விரும்பினால், விருப்பப்படி வாங்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:மேஷம் ராசிக்கு புத்தாண்டு பலன் 2024; நீண்ட நாளாக மனதில் அடக்கி வைத்திருந்த ஆசை நிறைவேறும்!