தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற டவ்தே புயல்

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலை கொண்டிருந்த டவ்தே புயல் மேலும் வலுப்பெற்று நேற்று மாலை தீவிர புயலாகவும், இன்று காலை அதி தீவிர புயலாகவும் வலுப்பெற்றுள்ளது.

tauktae-cyclone-intensified-into-a-severe
அதி தீவிரப் பயுலாக வலுப்பெற்ற டவ் தே புயல்

By

Published : May 16, 2021, 3:50 PM IST

சென்னை: டவ்தே புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பகுதிகளில் அடுத்த சில நாட்களில் எங்கு எங்கு மழை பெய்யும் என்பது குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

16.05.2021:நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

17.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

18.05.2021:நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

19.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

20.05.2021: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில்

கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 18 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், கோவை சோலையாறில் 17செ.மீ, நீலகிரி தேவலாவில் 15செ.மீ, கோவை வால்பாறை, நீலகிரி மேல் பவானியில் தலா 11 செ.மீ, கோவை சின்னக்கல்லாரில் 10செ.மீ, நீலகிரி நடுவட்டத்தில் 9செ.மீ, கன்னியாகுமரி சிவலோகத்தில் 8செ.மீ, நீலகிரி குடலுர் பஜாரில் 7செ.மீ, கன்னியாகுமரி குழித்துறையில் 6செ.மீ, தேனி தேக்கடியில் 5செ.மீ, தென்காசியில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :இன்று கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மத்திய கிழக்கு அரபிக்கடல், பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 145-155 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 170 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகத்தை கதிகலங்க வைக்கும் 'டாக்டே' புயல்

ABOUT THE AUTHOR

...view details