கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கோவிட்-19 பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் மதுபானக்கடைகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து பெருநிறுவனங்கள் பல தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தியது. நாட்டு மக்களிடையே கரோனா அச்சம் பரவி வந்ததையடுத்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் பேசினார். அப்போது, மார்ச் 21ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டும் என்றும், வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.