சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் இன்று (ஜூலை 22) சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாரதி, ”டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். இஎஸ்ஐ முறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மொத்த கடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அதிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த பணியாளர்கள் கொண்டுள்ள அருகில் உள்ள மாவட்டத்திற்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க கோரிக்கை! - chennai latest news]
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் எனத் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் மாநில தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
tasmac-union-press-meet
கரோனா தொற்றினால் உயிரிழந்த அனைத்து பணியாளர்களுக்கும் அரசின் சிறப்பு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க : அதிமுக உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்!