இது குறித்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதியைத் தவிர, இதர பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, மே மாதம் 7ஆம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாளை மதுக்கடைகள் திறப்பு - சென்னையில் டாஸ்மாக் திறப்பு தேதி
20:04 August 16
சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 18) முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபானக் கடைகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி(நாளை) முதல் இயங்கும். மேலும், வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். தகுந்த இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மது வாங்க வந்தவர்களை விரட்டியடித்த பெண்கள்: குடிமகன்களுக்குப் பாதுகாப்பு கொடுத்த போலீஸ்!