சென்னையில் கரோனா தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருந்ததால், கடந்த ஐந்து மாதங்களாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால், தற்போது சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால், நாளை (ஆக. 18) முதல் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.
சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு - பீர் பாட்டில் அனுப்பும் பணி தீவிரம்! - சென்னை மதுபானம் விற்பனை
சென்னை : ஐந்து மாதங்களுக்கு பிறகு சென்னையில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படவுள்ளதால், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பீர் பாட்டில்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, நாளை கடைகள் திறக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காலவாதியான பீர் பாட்டில்களை கடைகளிலிருந்து அப்புறப்படுத்தும் பணியும் முடிவடைந்தது. நாளை கடைகள் திறக்கப்படவுள்ளதால் பீர் பாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க, திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோனிலிருந்து சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளுக்கு முதற்ட்டமாக பீர்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், மற்ற மதுபான பாட்டில்கள் அதிக அளவில் இருப்பு உள்ளதால் அனைத்து வகையான மதுபானங்களையும் அனுப்பி வைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.