மூன்று நாட்கள் டாஸ்மாக் இருக்காது! எந்தெந்த நாள்கள்? - bar and wineshop closed
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று டாஸ்மார்க் மேலாண் இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.

tasmac closed
இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், தைப்பூசம் தினத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஜனவரி 15, 26, 28 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.