தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது - முழு ஊரடங்கு எதிரொலி

தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

tasmac-close-in-tamilnadu
tasmac-close-in-tamilnadu

By

Published : Jan 8, 2022, 3:57 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இதையடுத்து, கடந்த வாரம் அரசுத் துறை உயர் அலுவலர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதிமுதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. அதன்படி தமிழ்நாட்டில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்காது எனத் தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நாட்டில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details