தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் பார் டெண்டர் வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - டாஸ்மாக் பார் டெண்டர் வழக்கு ஒத்திவைப்பு

டாஸ்மாக் பார் டெண்டர் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

டாஸ்மாக் பார் டெண்டர் வழக்கு
டாஸ்மாக் பார் டெண்டர் வழக்கு

By

Published : Jan 10, 2022, 9:47 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை, காலிபாட்டில்களைச் சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது.

கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்குப் பதிலாக பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றைக் கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி சி. சரவணன் முன் இன்று (ஜனவரி 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, டெண்டர் படிவங்கள் பெறுவதற்கு யாரையும் தடுக்கவில்லை. விண்ணப்பம் வாங்க விடாமல் தடுக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. இதுவரை 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ் ஆஜராகி, கரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால், தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், கட்டட உரிமையாளர்களின் தடையில்லா சான்று தேவையில்லை எனக் கூறிவிட்டு, தற்போது வாடகை ஒப்பந்தங்கள் கேட்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், டெண்டர் நடைமுறைகள் நிறுத்தப்பட்ட எட்டு மாவட்டங்களைப் பொறுத்தவரை புதிய டெண்டர் கோரக்கூடாது. அலுவலர் ஒருவரை நியமித்து டெண்டர்களைத் திறக்க வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் காணொலி பதிவுசெய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மேல் முறையீடு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details