கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஜூன் 14ஆம் தேதி வரை சில மாவட்டங்களை தளர்வுகளோடு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு: டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி மறுப்பு - டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி மறுப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி மறுப்பு
கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களிலிலும் பிற மாவட்டங்களிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இதையும் படிங்க:மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கிய எஸ்.பி.வேலுமணி