தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதி இல்லாமல் ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணி - அரசு பதிலளிக்க உத்தரவு! - etv bharat

உரிய அனுமதி இல்லாமல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி இல்லாமல் பணிகள்
அனுமதி இல்லாமல் பணிகள்

By

Published : Jul 23, 2021, 1:53 PM IST

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டத் தடை விதிக்க கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய அனுமதிகளையும், ஒப்புதலையும் பெற்ற பின் கட்டுமானப் பணிகளை தொடரலாம் என உத்தரவிட்டது. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுக்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரசு பதிலளிக்க உத்தரவு

இதனை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:ஜம்முவில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோன்!

ABOUT THE AUTHOR

...view details