சென்னை:செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பிறகு ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய சர்வதேச செஸ் நடுவரும் செஸ் ஒலிம்பியாட் நேரடி பொறுப்பாளருமான ஆனந்த் பாபு, "செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் 99% முடிந்துவிட்டது.
இந்த ஒரு சதவீதம் ஏதாவது ஒரு பிரச்சனை வரும். அதை தவிர்ப்பதற்காக தற்போது முன்னெச்சரிக்கையாக சதுரங்க பலகையில் சென்சார், இணையதளம் வசதி போன்றவை சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு அரங்குகள் சதுரங்க பலகையுடன் தயார் நிலையில் உள்ளது. முதல் அரங்கில் 49 போட்டியிலும் இரண்டாவது அரங்கில் 128 போட்டிகளும் நடைபெறும். ஒரு போட்டிக்கு இரண்டு அணி, ஒரு அணியில் நான்கு நபர்கள் என எட்டு நபர்கள் ஒரு போட்டியில் இடம் பெறுவார்கள். எல்லாம் தயாராக உள்ளது. ஏற்கனவே ஒரு முறை செயல்படுத்தி உறுதி செய்து கொண்டோம். எனவே போட்டி நன்றாக நடைபெறும் என உறுதியாக உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டிக்கான அரசாணை வெளியீடு - இனி காலை மெனு இதுதான்!