சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் 480 இடங்களும், பிடெக் உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் பட்டப்படிப்புகளில் 100 இடங்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (www.tanuvas.ac.in / www2.tanuvas.ac.in) மூலம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் எட்டாம் தேதி மாலை 6 மணி வரை பெறப்பட்டன.
இதில் செப்டம்பர் 26ஆம் தேதி வரை கால்நடை மருத்துவ பட்டப்படிப்பிற்கு 22 ஆயிரத்து 486 மாணவகளும், பிடெக் பட்டப்படிப்புகளுக்கு நான்காயிரத்து 440 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்புக் கல்வியாண்டில் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு