தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது - இன்று தொடங்கியது

சென்னை: எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதனால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எல்.பி.ஜி டேங்கர் லாரி

By

Published : Jul 1, 2019, 7:47 AM IST

Updated : Jul 1, 2019, 10:12 AM IST

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கியது தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். நாமக்கல் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இச்சங்கத்தில் 5,500 எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த லாரிகள் மூலம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. முந்தைய ஐந்து ஆண்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்து புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது

அப்போது, 5,500 எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கும் பணி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு எட்டு மாதங்கள் ஆகியும் தற்போதுவரை 4,800 லாரிகளுக்கு மட்டுமே பணி கிடைப்பதாகவும், எஞ்சிய 700 லாரிகளுக்கு பணி வழங்கக்கோரியும் இன்று முதல் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, கடந்த 26ஆம் தேதி சங்க நிர்வாகிகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்கள், மீதமுள்ளவற்றில் 100 எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே பணி வாய்ப்பு தருவதாக அறிவித்திருந்தனர்.

அதனை ஏற்க மறுத்த லாரி உரிமையாளர்கள், திட்டமிட்டபடி இன்று தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Last Updated : Jul 1, 2019, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details