சென்னை:அண்ணா பல்கலைக்கழகம், வளாக கல்லூரி, இணைவு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்குத் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதே போல், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுநிலை படிப்புகளில் சேர்வதற்குக் கடந்த ஆண்டு முதல், பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA) எனும் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.
அதன்படி, 2024-25ஆம் கல்வியாண்டிற்கான படிப்பில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு (சீட்டா-பி.ஜி) ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.