சென்னை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடாமல், விதிகள் படி அமைக்கப்பட்டிருந்த கடைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், உதவி ஆணையர் பரிந்துரையின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்குகின்றனர். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்து 50 மீட்டர் தூரத்திலும், மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திலும் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்