ராஜீவ் காந்தி நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை வெல்லிங்டன் பிளாசா முதல், சத்தியமூர்த்தி பவன் வரை அமைதி பேரணி நடைப்பெற்றது.
ராஜீவ் காந்தியின் 28ஆவது நினைவு தினம் - அமைதி பேரணி! - silent rally
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமைதி பேரணி
அமைதிப் பேரணி
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அமைதிப் பேரணியைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொதி ஏற்றுக்கொண்டனர்.