தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்கு, வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - இன்றைய வானிலை நிலவரம்:

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
மேற்கு, வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

By

Published : Jul 31, 2021, 1:25 PM IST

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் நீலகிரி, கோயமுத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

02.08.2021:நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
03.08.2021,04.08.2021: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை வானிலை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வங்க கடல் பகுதிகள்

31.07.2021: தென் மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்

31.07.2021 - 04.08.2021: தென் மேற்கு, வடக்கு, மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details