சென்னை : வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெற்கு ஆந்திரக் கடலோரம் மற்றும் அதனை ஒட்டியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தவிர, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் அக்டோபர் 9ஆம் தேதி அந்தமானை ஒட்டி உருவாகக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.