தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் - தென்தமிழக கடலோர மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharatதமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு  வறண்ட வானிலை நிலவக்கூடும்
Etv Bharatதமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்

By

Published : Jan 9, 2023, 1:19 PM IST

சென்னை:இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன.10ஆம் தேதி முதல் ஜன.13ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:இன்றும்(ஜன.9), நாளையும்(ஜன.10) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கடலுக்கு மேலே அஜித் பேனர்.. கடலுக்கு கீழே விஜய் பேனர்.. ரசிகர்கள் அலும்பல்..

ABOUT THE AUTHOR

...view details