தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்மிகத் தலங்களுக்கான புதிய சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம்!

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஆன்மிகத் தலங்களுக்கான புதிய சுற்றுலா பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

tour-package-of-spiritual-sites

By

Published : Sep 11, 2019, 11:52 AM IST

ஆன்மிகத் தலங்களுக்கான புதிய சுற்றுலா பேக்கேஜுகள் பற்றி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளது. மேலும் இச்சுற்றுலா நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், சிறப்பு விசேஷ நாட்களிலும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  • சென்னை நவக்கிரக ஒருநாள் சுற்றுலா

சோமநாதீஸ்வரர் திருக்கோயில் (சோமங்களம்), நாகேஸ்வரர் திருக்கோயில் (குன்றத்தூர்), அகத்தீஸ்வரர் திருக்கோயில் (பொழிச்சலூர்), சுயதரேஸ்வரர் திருக்கோயில், (கோவூர்) நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் (கெருகம்பாக்கம்), அகத்தீஸ்வரர்
திருக்கோயில் (கொளப்பாக்கம்) உள்ளிட்ட தலங்களுக்கு அழைத்து செல்லப்படும்.

குளிர்சாதனப் பேருந்தில் அழைத்து செல்லப்படும் இந்தச் சுற்றுலாவுக்கு கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படுகிறது.

  • சென்னை நவசக்தி ஆலய ஒருநாள் சுற்றுலா

காளிகாம்பாள் திருக்கோயில் (பிராட்வே), தேவி வடிவுடையம்மன் திருக்கோயில் (திருவொற்றியூர்) திருவுடையம்மன் திருக்கோயில் (மேலூர்), ஆனந்தவல்லியம்மன் திருக்கோயில் (பஞ்சேஷ்டி), ஆனந்த வல்லியம்மன் திருக்கோயில் (நட்டம்) தேவி
செங்கால அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படும்.

இந்தக் குளிர்சாதன பேருந்து பயண சுற்றுலாவுக்கு கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படுகிறது.

  • சங்கடகர சதுர்த்தி - பிள்ளையார்பட்டி சுற்றுலா

ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் காலை உணவு வழங்கப்படும்.

அதன்பின், காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பிள்ளையார்பட்டி திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பகல் 1.30 மணி வரை பக்தர்கள் திருக்கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், மாலை 4.00 மணிக்கு ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இரவு உணவு சமயபுரத்தில் வழங்கப்படும். அன்றிரவு சமயபுரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை வந்தடைவர்.

இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 2,600 மற்றும் சிறியவர்களுக்கு (6-12 வயது) ரூ.1,300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அனைத்து சுற்றுலாவுக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்திலிருந்து பேருந்து புறப்படும் என்றும் பிள்ளையார்பட்டி சுற்றுலாவுக்கு தாம்பரத்திலிருந்தும் பொதுமக்கள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக சுற்றுலா பற்றி அறிய சொடுக்கவும்... http://tamilnadutourism.org/navagraha.html

ABOUT THE AUTHOR

...view details