தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு! - meteorological department updates

சென்னை: தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

tamilnadu today rain updates

By

Published : Oct 5, 2019, 12:14 PM IST

மழைப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சேலத்தில் 8 செ.மீ. மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details