தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1,733 பேருக்கு கரோனா - தமிழ்நாடு கரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று (செப். 24) புதிதாக 1,733 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

covid update  tamilnadu today covid update  corona update  tamilnadu corona update  corona  tamilnadu corona update  கரோனா பாதிப்பு  காரோனா தொற்று  கரோனா  கரோனா பரவல்  தமிழ்நாடு கரோனா நிலவரம்  கரோனா நிலவரம்
கரோனா

By

Published : Sep 24, 2021, 9:48 PM IST

சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியிட்டுள்ள கரோனா புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 531 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 1,733 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 51 லட்சத்து 69 ஆயிரத்து 95 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 26 லட்சத்து 53 ஆயிரத்து 848 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன.

அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறப்பு விபரம்

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,631 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து ஒரு ஆயிரத்து 198 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 8 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 19 நோயாளிகளும் என 27 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 454 என உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூரில் புதிதாக 210 நபர்களுக்கும், சென்னையில் 205 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 122 நபர்களுக்கும் ஈரோட்டில் 119 நபர்களுக்கும், திருப்பூரில் 98 நபர்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,48,725

கோயம்புத்தூர் - 2,41,355

செங்கல்பட்டு - 1,68,078

திருவள்ளூர் - 1,17,360

ஈரோடு - 1,01,248

சேலம் - 97,721

திருப்பூர் - 92,496

திருச்சிராப்பள்ளி - 75,689

மதுரை - 74,445

காஞ்சிபுரம் - 73,720

தஞ்சாவூர் - 72,948

கடலூர் - 63,176

கன்னியாகுமரி - 61,604

தூத்துக்குடி - 55,753

திருவண்ணாமலை - 54,135

நாமக்கல் - 50,282

வேலூர் - 49,277

திருநெல்வேலி - 48,764

விருதுநகர் - 45,969

விழுப்புரம் - 45,338

தேனி - 43,368

ராணிப்பேட்டை - 42,935

கிருஷ்ணகிரி - 42,666

திருவாரூர் - 39,956

திண்டுக்கல் - 32,727

நீலகிரி - 32,535

கள்ளக்குறிச்சி - 30,820

புதுக்கோட்டை - 29,617

திருப்பத்தூர் - 28,877

தென்காசி - 27,255

தருமபுரி - 27,446

கரூர் - 23,474

மயிலாடுதுறை - 22,656

ராமநாதபுரம் - 20,302

நாகப்பட்டினம் - 20,317

சிவகங்கை - 19,748

அரியலூர் - 16,644

பெரம்பலூர் - 11,886

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,025

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் நடந்த ஸ்டாமிங் ஆபரேஷன்; ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details