தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு கோவிட்-19 பாதிப்பு: 512 பேருக்கு தொற்று உறுதி; 564 பேர் குணமடைந்தனர் - tamilnadu corona

தமிழ்நாட்டில் மேலும் 512 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

tamilnadu today covid bulletin
தமிழ்நாடு கோவிட்-19 பாதிப்பு: 512 பேருக்கு தொற்று உறுதி

By

Published : Jan 27, 2021, 8:02 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் மேலும் 512 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 27ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 55 ஆயிரத்து 910 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 507 நபர்கள், தமிழ்நாட்டிற்கு டெல்லி, கர்நாடகாவில் இருந்து வந்த தலா இரண்டு நபர்கள், பீகாரில் இருந்து வந்த ஒருவர் என 512 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்து 97 ஆயிரத்து 552 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 315 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 564 நபர்கள் மேலும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 306 என உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகள், அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் என 8 நோயாளிகள் மேலும் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,333 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை- 2,30,675
  • கோயம்புத்தூர்- 54,176
  • செங்கல்பட்டு- 51365
  • திருவள்ளூர்- 43473
  • சேலம் - 32347
  • காஞ்சிபுரம்- 29211
  • கடலூர் - 24,904
  • மதுரை- 20953
  • வேலூர்- 20690
  • திருவண்ணாமலை- 19342
  • தேனி -17063
  • தஞ்சாவூர் - 17636
  • திருப்பூர் - 17804
  • விருதுநகர் -16545
  • கன்னியாகுமரி -16780
  • தூத்துக்குடி -16262
  • ராணிப்பேட்டை -16102
  • திருநெல்வேலி -15542
  • விழுப்புரம் -15172
  • திருச்சிராப்பள்ளி -14628
  • ஈரோடு மாவட்டம் 14,285
  • புதுக்கோட்டை -11537
  • கள்ளக்குறிச்சி -10867
  • திருவாரூர் -11172
  • நாமக்கல் -11584
  • திண்டுக்கல் -11,216
  • தென்காசி -8409
  • நாகப்பட்டினம் -8421
  • நீலகிரி -8177
  • கிருஷ்ணகிரி -8052
  • திருப்பத்தூர் -7562
  • சிவகங்கை -6652
  • ராமநாதபுரம் -6410
  • தருமபுரி -6574
  • கரூர் -5381
  • அரியலூர் -4681
  • பெரம்பலூர் -2261
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1036
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

ABOUT THE AUTHOR

...view details