தமிழ்நாட்டில் மேலும் 1,697 பேருக்கு கரோனா - கரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1,697 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா
By
Published : Sep 19, 2021, 7:54 PM IST
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செப்டம்பர் 19ஆம் தேதி வெளியிட்டுள்ள கரோனா புள்ளி விவர தகவலில், “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 319 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து 1,696 நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 1,697 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 98 ஆயிரத்து 676 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 45 ஆயிரத்து 380 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 1,594 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 93 ஆயிரத்து 74 என உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் என 27 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 337 என உயர்ந்துள்ளது.