மக்கள் நல்வாழ்வுத்துறை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சென்னையில் மேலும் தனியார் ஆய்வகம் ஒன்றிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 265ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 408 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 17 ஆயிரத்து 858 நபர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 39 நபர்கள் என 17 ஆயிரத்து 897 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரத்து 645 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து 15 ஆயிரத்து 542 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், தனியார் மருத்துவமனையில் 46 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 61 நோயாளிகளும் என 107 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 17897 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் மேலும் 17 ஆயிரத்து 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556ஆக உயர்ந்துள்ளது. 107 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 5, 445 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 1,164 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 1,008 நபர்களுக்கும், திருநெல்வேலியில் 849 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 513 நபர்களுக்கும், மதுரையில் 604 நபர்களுக்கு என தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை மாவட்டம் - 3, 28, 520
செங்கல்பட்டு மாவட்டம்- 78, 757
கோயம்புத்தூர் மாவட்டம்- 77, 280
திருவள்ளூர் மாவட்டம் - 58, 801
சேலம் மாவட்டம் - 40, 885
காஞ்சிபுரம் மாவட்டம் - 37,578
மதுரை மாவட்டம் - 30,117
கடலூர் மாவட்டம் - 29, 845
வேலூர் மாவட்டம்- 26,533
தஞ்சாவூர் மாவட்டம் - 25, 185
திருப்பூர் மாவட்டம் -25, 979
திருநெல்வேலி மாவட்டம் 23, 987
திருவண்ணாமலை மாவட்டம் 23, 601
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 22, 922
தூத்துக்குடி மாவட்டம் 22, 805
கன்னியாகுமரி மாவட்டம் 21, 445
ராணிப்பேட்டை மாவட்டம் 20, 323
ஈரோடு மாவட்டம் 20, 729
தேனி மாவட்டம் 19, 905
விருதுநகர் மாவட்டம் 19, 627
விழுப்புரம் மாவட்டம் 18, 551
நாமக்கல் மாவட்டம் 15, 645
திண்டுக்கல் மாவட்டம் 15, 505
திருவாரூர் மாவட்டம் 15, 019
கிருஷ்ணகிரி மாவட்டம் 14, 004
புதுக்கோட்டை மாவட்டம் 13, 569
நாகப்பட்டினம் மாவட்டம் 13, 254
கள்ளக்குறிச்சி மாவட்டம் 12, 495
தென்காசி மாவட்டம் 11, 695
திருப்பத்தூர் மாவட்டம் 9, 844
நீலகிரி மாவட்டம் 9, 792
தருமபுரி மாவட்டம் 9, 250
ராமநாதபுரம் மாவட்டம் 8, 170
சிவகங்கை மாவட்டம் 8, 441
கரூர் மாவட்டம் 7, 388
அரியலூர் மாவட்டம் 5, 529
பெரம்பலூர் மாவட்டம் 2, 588
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1, 000
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1, 073
ரயில் மூலம் வந்தவர்கள் 428