தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போச்சுடா... மீண்டும்.. மீண்டுமா? - சென்னை வானிலை மையம் கொடுத்த ஷாக்! - tomorrow chennai weather forecast

வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டிசம்பர் 1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும்
தமிழ்நாட்டில் டிசம்பர் 1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 5:29 PM IST

சென்னை:கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை (நவ.26) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (நவ 25) கடலுார், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழையும் பதிவாகிவுள்ளது. காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலையே நிலவி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக சென்னை அடையாறு பகுதியில், 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இதே போல் தமிழ்நாட்டில் கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், ஈரோடு, சேலம், நெல்லை என பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையானது பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details