தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வருகின்ற ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

tasmac
tasmac

By

Published : May 5, 2020, 12:04 AM IST

கரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டையொட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளைத் திறக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழ்நாடு எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக்கடைகளை வருகின்ற வியாழக்கிழமை (7.5.2020) முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள் திறக்கப்படமாட்டாது.

நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.

1. மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.

2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்குமுள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

3. மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கும் மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

4. மதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.

5. அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

6. ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்திக் கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு மதுபானக் கடை

மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதியில்லை.

இதையும் படிங்க:கோயம்பேடு சந்தை மூடல்: திருமழிசைக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details