உலக யோகா தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் ஜூன் 18,19,20 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான யோகாப் போட்டி நடைபெற்றது. இதில், 25 மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய யோகாப் போட்டியில் தமிழ்நாட்டுக்கு 8 தங்கப்பதக்கங்கள்
சென்னை: உலக யோகா தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
தேசிய யோகாப் போட்டியில் 8 தங்கப்பதக்கம்
தமிழ்நாடு சார்பாக 18 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பிரிவில், மாணவர்கள் 4 தங்கப்பதக்கமும், மாணவியர்கள் 4 தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்கள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.