தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விலக்கு புதிய மசோதா: இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் - இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம்; நீட் எதிர்ப்பு மசோதா ஆலோசனை!
இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம்; நீட் எதிர்ப்பு மசோதா ஆலோசனை!

By

Published : Feb 8, 2022, 7:52 AM IST

சென்னை: சென்னையில் கடந்த பிப்ரவரி 5 அன்று தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவினை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துச் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருந்தது.

சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட உள்ளதாக முன்னதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

நீட் விலக்கு சட்ட முன்வடிவு இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு இந்தக் கூட்டத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது. கூட்டத்தில் காகிதமில்லா இ-பேப்பர் மூலம் அறிக்கைகள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி ஒப்புதலுடன் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. முன்னதாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவும் அதிமுகவும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அலுவலர்கள் விதிமீறல்: கடம்பூர் பேரூராட்சித் தேர்தல் ரத்து

ABOUT THE AUTHOR

...view details