தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை!

சென்னை : ஊரடங்கு முடியும் வரை 50 விழுக்காட்டுக்கு பதிலாக 33 விழுக்காடு பணியாளர்களை மட்டுமே பணிக்குவர அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

tamilnadu secretariat association workers wrote a letter to tamilnadu chief minister
tamilnadu secretariat association workers wrote a letter to tamilnadu chief minister

By

Published : Jun 6, 2020, 3:16 AM IST

தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், “கரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதால் தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பலருக்கு தொற்று பரவாமலிருக்க முழு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அமைச்சர்கள், அரசுச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள், காவலர்கள், ஊடகவியலாளர்கள், துறைத் தலைமையிடப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், பொதுமக்கள் நாள்தோறும் தலைமைச் செயலகத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்திற்கு வருகைதரும் பணியாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த இருவாரங்களில் தலைமைச் செயலகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் சுமார் 25 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மேல் கரோனா தொற்று பாதிப்பால், பல்வேறு மருத்துவமனை மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுடன் பழகிய மற்ற பணியாளர்கள் இந்த நோய்த் தொற்றை குடும்பத்தாருக்கும், உடன் பணி செய்பவர் மற்றும் பயணம் செய்யும் பிறருக்கும் பரப்பும் அபாயம் உள்ளது.

இச்சூழ்நிலையில், அந்நோய் தொற்று மேலும் சமூகப்பரவலாகப் பரவாமலிருக்க உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள தகுந்த இடைவெளியின்றி பணிசெய்வதென்பது நோய்த்தொற்றுக்கு மேலும் வழிவகுக்கும்.

எனவே, ஊரடங்கு முடியும் வரை 50 விழுக்காட்டுக்கு பதிலாக 33 விழுக்காடு பணியாளர்களை மட்டுமே பணிக்குவர அனுமதிக்க வேண்டும் என ஏற்கெனவே தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நோய்த்தொற்று மேலும் சமூகப்பரவலாகப் பரவாமலிருக்க கீழ்க்காணும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

1. அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி சுழற்சி முறைகளை மீறி பிரிவு அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், எழுத்தர்கள், துறைச் செயலாளர்களின் தனி அலுவலர்கள் தினந்தோறும் பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து அலுவலக நடைமுறை சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

2. சென்னை ராயபுரம் உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களிலிந்து (Red Zones) வரும் பணியாளர்கள் ஊரடங்கு முடியும்வரை அலுவலகம் வருவதைத் தவிர்க்க ஆணை வழங்க வேண்டும்.

3. தொழில்துறையில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட உடன் தொடர்ந்து 4 நாட்கள் அலுவலகம் வரவேண்டாம் என உத்தரவிடப்பட்டதைப்போல, பிற துறைகளிலும் பின்பற்ற பொது ஆணையிட வேண்டும்.

4, கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டு, நோய்த் தடுப்பு மேற்கொள்ளும் காலத்தை சிறப்பு தற்செயல் விடுப்பாக (Special Casual leave) அனுசரிக்க வேண்டும்.

5. நாமக்கல் கவிஞர் மாளிகையில் தற்போது குளிர்சாதன வசதிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், போதிய காற்று வசதியின்றி பணியாளர்கள் தவிப்பு வருகின்றனர். எனவே, இயற்கைக் காற்று கட்டடத்திற்குள் வரும் வகையில் கட்டட அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் தற்காலிக ஏற்பாடாக அனைத்துத் துறைகளுக்கும் மின்விசிறிகள் வழங்க வேண்டும்.

6. அனைத்து தூய்மைப்பணியாளர்களுக்கும் மாதம் இருமுறை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு அவர்களையும் நமது சகோதரர்களாகப் பாவித்து பேணிக்காக்க வேண்டும்.

7, போதிய அளவில் பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் மாலையில் அலுவல் நேரம் முடிந்து கூடுதல் நேரத்தில் பணிபுரிந்து தாமதமாக செல்லும் பணியாளர்களுக்கு உரிய வாகன போக்குவரத்துகளை ஏற்பாடு செய்து தரும்படி அனைத்து துறை செயலாளர்களையும் வலியுறுத்த வேண்டும்.

8. மத்திய அரசு அனுமதித்து உள்ளதைப்போல, கருவுற்ற தாய்மார்கள், மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள 55 வயதைக்கடந்த பணியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய், காசநோய், இரத்த சோகை உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்களுக்கு ஊரடங்கு முடியும்வரை அலுவலகப்பணி மேற்கொள்ள விலக்கு அளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details