சென்னை:தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பாகுதிகளில் இருந்தும் உள்ள பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வரும் வெள்ளி, சனி, ஞாயிறு கிளமைகளில் கூடுதலாக பெருந்துகள் இயக்கப்படும் எனவும் தொலை தூரம் பயணிக்கும் பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தேவர் மகன் படத்தில் ‘இசக்கி’ கதாபாத்திரமே மாமன்னன் - மாரி செல்வராஜ்
தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களுரு ஆகிய இடங்களுக்கு ஆயிரத்து 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் வரும் வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.