தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப்  புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு - Tamilnadu school 10th and 12th revision exams date released

10, 12ஆம் வகுப்புகளுக்கு நடத்தவிருக்கும் திருப்புதல் தேர்வுக்கான புதிய கால அட்டவணையைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

By

Published : Jan 31, 2022, 4:38 PM IST

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்த திருப்புதல் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2021-2022ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் அடைவுத்திறனைச் சோதிக்கும் வகையில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி, மார்ச் மாதங்களில் முதல், இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஒமைக்ரான் பெருந்தொற்று காரணமாக 2022 ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை தேர்வு நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் மாதம் 28ஆம் தேதிமுதல், ஏப்ரல் 4ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதிமுதல் ஏப்ரல் ஐந்தாம் தேதிவரை நடைபெறுகிறது.

இதற்கான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது,

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை

தேதி பாடம்
09.02.2022 தமிழ்
10.02.2022 ஆங்கிலம்
11.02.2022 கணிதம்
12.02.2022 விருப்பப் பாடம்
14.02.2022 அறிவியல்
15.02.2022 சமூக அறிவியல்

தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரையில் நடைபெறும்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கால அட்டவணை

தேதி பாடம்
09.02.2022 மொழித்தாள்
10.02.2022 ஆங்கிலம்
11.02.2022 தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
12.02.2022 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
14.02.2022 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, ஆடை வடிவமைப்பு மற்றும் டெக்ஸ்டைல்ஸ், உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், செவிலியர் (பொது), செவிலியர் (தொழிற்கல்வி)
15.02.2022 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோ மாெபைல் பொறியியல், டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் தலைமைப்பண்பு
16.02.2022 இயற்பியல், பொருளியியல், கணினி தொழில்நுட்பம்

இவர்களுக்கான தேர்வுகள் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் நடைபெறும்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2ஆம் திருப்புதல் தேர்வு

தேதி பாடம்
28.03.2022 தமிழ்
29.03.2022 ஆங்கிலம்
30.03.2022 கணக்கு
31.03.2022 அறிவியல்
01.04.2022 சமூக அறிவியல்
04.04.2022 விருப்பப் பாடம்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை

தேதி பாடம்
28.03.2022 மொழித்தாள்
29.03.2022 ஆங்கிலம்
30.03.2022 தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
31.03.2022 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
01.04.2022 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோ மாெபைல் பொறியியல், டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் தலைமைப்பண்பு
04.04.2022 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து, ஆடை வடிவமைப்பு மற்றும் டெக்ஸ்டைல்ஸ், உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், செவிலியர் (பொது), செவிலியர் (தொழிற்கல்வி)
05.04.2022 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்

இதையும் படிங்க:தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு தொடக்கம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details