தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1980க்கு பின் தமிழ்நாட்டில் நடந்த என்கவுன்ட்டர்களின் விவரம்...! - ரவுடிகள் என்கவுண்ட்டர்

சென்னை: இன்று அயனாவரம் காவல் ஆய்வாளரால் ரவுடி சங்கர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் காவலர்கள் நடத்திய என்கவுன்ட்டர் விவரங்கள்.

tamilnadu-rowdy-encounters-list
tamilnadu-rowdy-encounters-list

By

Published : Aug 21, 2020, 6:34 PM IST

தமிழ்நாட்டில் 1980களில் நக்சலைட்கள் நடவடிக்கை தலைதூக்கியது. அப்போதுதான் முதல் முறையாக என்கவுன்ட்டர் கொலைகள் நடந்தேறின. நக்சலைட்கள் பலர் காவல் துறையினருடன் நடந்த மோதலின்போது கொல்லப்பட்டனர்.

*1998ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலின்போது ரவுடி ஆசைத்தம்பியும், அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

*29-9-2002ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் படை பெங்களூர் சென்று அங்கு பதுங்கியிருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

*26-9-2003ஆம் ஆண்டு சென்னையில் வெங்கடேச பண்ணையார் காவல் துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

*27-7-2003ஆம் ஆண்டு மெரீனா கடற்கரையில் வைத்து சென்னை மாநகரையே நடுநடுங்க வைத்த தாதா அயோத்தி குப்பம் வீரமணி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

*18-10-2004ஆம் ஆண்டு ஆண்டு வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

*5-2-2007ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் ரவுடி மணல்மேடு சங்கர் நாகப்பட்டினத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

*1-8-2007ஆம் ஆண்டு சென்னையை கலங்க வைத்த ரவுடிகளில் ஒருவனான வெள்ளை ரவி என்கவுணன்ட்டர் செய்யப்பட்டார்.

*11-7-2008ஆம் ஆண்டு சென்னை காசிமேட்டில் பாபா சுரேஷ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

*10-11-2010ஆம் ஆண்டு கோவையில், பத்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில் கைதாகி, விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டார்.

*9-2-2010ஆம் ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரை சென்னை அருகே பனையூரில் காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

*31-11-2012ஆம் ஆண்டு சிவகங்கை காவலர் ஆல்பின் சுதனை கொலை செய்த குற்றவாளிகள் பிரபு, பாரதியை காவல் துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

*25-2-2012ஆம் ஆண்டு சென்னையில் உள்ள வங்கிகளில் கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த ஐந்து பேர் என்கவுன்ட்டரால் உயிரிழந்தனர்.

*13-6-2015ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் பத்தமடையில் ரவுடி கிட்டப்பா என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

*2017ஆம் ஆண்டு ஜனவரியில் சிவகங்கை, ரவுடி கார்த்திகைச்செல்வனை காவலர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

*13-4-2017ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் ரவுடி கோவிந்தன் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார்.

*1-3-2018ஆம் ஆண்டு மதுரையில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், மதுரை சிக்கந்தர் ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

*4-7-2018ஆம் ஆண்டு ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன் சென்னை தரமணியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இவர் ராயப்பேட்டைக் காவலரை வெட்டியதால் கைது செய்யப்பட்டு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

*2-5-2019ஆம் ஆண்டு சேலம் கரியாப்பட்டி பகுதியில் ரவுடி கதிர்வேல் என்கவுன்ட்டர்.

*15-6-2019ஆம் ஆண்டு சென்னை மாதவரத்தில் ரவுடி வல்லரசு என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

*23-9-2019ஆம் ஆண்டு கொரட்டூரில் பிரபல ரவுடி மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. விழுப்புரம் காவல் துறையினர் சென்னை வந்து என்கவுண்டர் செய்தனர்.

*இன்று (21-8-2020) அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: காவல் ஆணையர் அகர்வால் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details