சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 30 ஆயிரத்து 76 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 39 நபர்களுக்குப் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 43 லட்சத்து 91 ஆயிரத்து 491 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 52 ஆயிரத்து 790 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மட்டும் தனிமைப்படுத்தும் மையங்களில் 322 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இன்று ஒரே நாளில் 56 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 443 என உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் உயிரிழப்பு பதிவாகவில்லை. எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற அளவிலேயே உள்ளது.
மேலும் சென்னையில் 18 நபர்களுக்கும், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், வேலூரில் மூன்று நபருக்கும், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும் என 39 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரா மருத்துவ மாணவி தற்கொலை - கல்லூரியில் பணம் கட்ட முடியாததால் விபரீத முடிவா?