தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வெளிநாட்டு விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ - உயர் நீதிமன்றம் - center alleged tamilnadu govt

சென்னை : வெளிநாட்டு விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

tamilnadu refuse to land special flight, centre reply
tamilnadu refuse to land special flight, centre reply

By

Published : Jun 29, 2020, 3:40 PM IST

நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சர்வதேச விமான சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் மீட்டுவர ‘வந்தே பாரத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் விமானங்களைத் தரையிறக்க தமிழ்நாடு மாநில அரசு அனுமதியளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

தொடர்ந்து, ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் மாநிலத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க ஆயிரத்து 748 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் ஏற்கனவே, இரண்டு கட்டங்களாக 661 விமானங்கள் மூலம் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 187 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்றும் தமிழ்நாட்டிற்கு மட்டும் 17 ஆயிரத்து 707 தமிழர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது

மூன்றாவது கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து 587 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கப்பட்டு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசு விமானங்களை தரையிறக்க அனுமதி மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும், வெளி நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், ஹைதராபாத், பெங்களூருவில் இறங்கி அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகின்றனர் என்றும், விமானங்களைத் தரையிறக்க அனுமதி மறுப்பது ஏன் என தமிழ்நாடு அரசு தான் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதில், திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் 27 ஆயிரம் பேர் எப்போது தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏராளமானவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

விமானங்கள் தரையிறங்க அனுமதி அளித்தது குறித்து கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க :சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details