சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
'நீதிமன்ற வளாகங்களில் கரோனா சிகிச்சை மையங்கள்' - பார் கவுன்சில் வேண்டுகோள்! - தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கடிதம்
நீதிமன்ற வளாகங்களில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதில், "கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக பல வழக்கறிஞர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபகாலமாக கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்காமல், பலர் ஆம்புலன்ஸ்களில் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீதித்துறை அத்தியாவசிய பணியாக உள்ளதால், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு வசதியாக நீதிமன்ற வளாகங்களில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.