தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு முதலைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் இரங்கல்
அரசியல் தலைவர்கள் இரங்கல்

By

Published : Dec 30, 2022, 9:53 AM IST

அகமதாபாத்:குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இருதய மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிசம்பர் 30) அதிகாலை 3:30 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, உங்களது அன்புக்குரிய தாயார் ஹீராபென்னுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன்.

உங்களது இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நமது பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தெலங்கான மாநில ஆளுவரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

மழலையாய் பிறந்த மகனை...

பிறர் மலைப்புற வளர்த்து... உறுதியான

மலை என பொது வாழ்க்கையில்

உயரச் செய்து... உலகிலேயே

உயர்ந்த மனிதராய் உயர்த்தி

தன் தள்ளாத வயதிலும்... தளர்வில்லா

வலிமையை... உலகின்

வலிய தலைவராம்...நம்

பிரதமருக்கு...

தற்போது மட்டுமல்ல

பிறந்ததிலிருந்து... அளித்துவந்த

அன்னை தீபம் அணைந்து விட்டது

எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு

எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்

எதையும் தாங்கும்

எப்போதும் உள்ள உறுதியை

இப்போதும் நம் இறைவன் நம்

பிரதமருக்கு அருளட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்தோடு, நம் பாரதப் பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 430 மணி முதல் மாலை 6.00 வரை, சென்னை பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்திலும், மற்றும் ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகத்திலும். ஹீராபென் திருஉருவப் படத்திற்கு கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அனைத்து மாவட்ட தலைவர்களும் செய்ய வேண்டுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ: தாயின் உடலை தோளில் சுமந்துசென்ற பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details