தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு! - பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

tamilnadu police
tamilnadu police

By

Published : Jan 14, 2020, 10:38 PM IST

அண்ணா நகர் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து கொண்டாடிய பொங்கல் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட், கராத்தே உள்ளிட்ட 13 போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், "2019ஆம் ஆண்டை போல் இந்த வருடம் காவல்துறை சார்பில் பொங்கல் விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் காவல் துறையினர் விடுமுறையை தவிர்த்துவிட்டு, பொதுமக்களுக்கு அச்சத்தை போக்கும் வகையில் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். காவல்துறை என்பது ஒரே குடும்பம்.

பள்ளிகளில் பழைய புத்தகங்களை மீண்டும் பயன்படுத்த ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்

காணும் பொங்கல் பண்டிகையின்போது அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களான சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுவார்கள். கடற்கரையில் மணலில் செல்லக் கூடிய வாகனம் மற்றும் ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details